ஆதிச்சநல்லூரில் ஆன்சைட் அருங்காட்சியகம் திறப்பு

 
tn

 ஆதிச்சநல்லூரில் ஆன்சைட் அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

tn

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகம் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த அருங்காட்சியகத்தில் அகழாய்வு பணியின்போது எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட உள்ள நிலையில், ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆதிச்சநல்லூர் பரம்பில் சைட் மியூசியம் அமைக்கவும் அதன் மேல் கண்ணாடி பேழை அமைத்து பார்வையாளர் பார்வையிடவும் பணி நடைபெற்று வருகிறது. ஆதிச்சநல்லூரில் பரம்பு பகுதியில் கண்ட 2021 ஆம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன . ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்  இந்தியாவில் ஐந்து இடத்தில் மியூசியம் அமைக்கும் பணியில் முதன்முதலாக ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டு திறப்பதற்காக தயாரானது.

tn

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம்  ஆதிச்சநல்லூரில் ஆன்சைட் அருங்காட்சியகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார் . அருங்காட்சியகத்தை திறந்துவைத்த  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பழங்கால மக்கள் பயன்படுத்திய தாழிகள், அகழாய்வு செய்யப்பட்ட குழி ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.