கரூரில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை..

 
ஐடி ரெய்டு

கரூரில் 8-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்ந்து வருகிறது.  

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் என அவர் சார்ந்த பலரது  வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரிகள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த சோதனை இன்று 8வது நாளை எட்டியிருக்கிறது.    வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த  சோதனைக்கு தி.மு.க.வினர் கடும் திர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு, அவர்கள் வந்த  கார்களையும் சேதப்படுத்தினர்.    

செந்தில் பாலாஜி

இதனைத்தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்புடன் 27-ந்தேதி முதல் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில்  அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து 8-வது நாளாக இன்றும்  வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடந்து வருகிறது.  முதலில் 28 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று மேலும் பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால், கரூரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.