சாலையில் சுற்றி திரியும் மாடுகள் - அபராதம் உயர்த்த முடிவு

 
tn

சாலையில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்த, உரிமையாளர்களுக்கான அபராதத்தை உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஓயாத மாடு தொல்லை! பாதசாரிகளை முட்டியதால் பரபரப்பு

கடந்த 14ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில்   அவ்வழியாக சென்ற பாதசாரிகளை மாடு ஒன்று முட்டியதில், அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. சாலையில் நின்ற அம்மாடு வெகு நேரம் அவ்வழியாகச்  சென்றவர்களை விரட்டி விரட்டி முட்டியது. இச்சம்பவம் தொடர்பாக மாநகராட்சி தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, தேவராஜ் என்பவரின் மாட்டை பிடித்து மாட்டு உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். ஏற்கனவே மாட்டின் உரிமையாளருக்கு  மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்டது தெரிய வந்தது.

tb

இந்நிலையில் சென்னை மாநகர சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த தவறிய உரிமையாளருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, 2,000 இருந்து 10,000 ஆக உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இம்மாத இறுதியில் தீர்மானம் நிறைவேற்றி, வரும் அக்டோபர் முதல் புதிய அபராதத்தை வசூலிக்க முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.