அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு - 14 பேர் பாதிப்பு
ஏடிஸ் எனப்படும் கொசுவினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. சமீபத்தில் சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். சுகாதாரத் துறை சார்பிலும் மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வருகிறது. இந்த சூழலில் கடலூரில் 6 பேருக்கும், கும்பகோணத்தில் மூன்று பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 11 வயது சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலையில் 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையில் ஒரே நாளில் ஐந்து பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூரில் ஆறு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கும்பகோணத்தில் டெங்கு காய்ச்சலால் மூன்று பேர் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 26 பேர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.