சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா - 62 பேருக்கு பாராட்டு சான்றிதழ்

 
tn

சென்னை மெட்ரோ இரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 62 நபர்களுக்கு மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

சென்னை, நந்தனதில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான மெட்ரோஸில் சுதந்திர தின விழா இன்று (15.08.2023) நடைபெற்றது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும் / முதன்மை செயலாளருமான மு.அ.சித்திக் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

tn
பின்னர், சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது சக ஊழியர்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கேரம், சதுரங்கம், டேபிள் டென்னிஸ், ஸ்கிப்பிங் மற்றும் சுறுசுறுப்பான நடை (Brisk Walk) ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 45 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணிபுரிந்த 13 அலுவலர்கள் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பணிபுரிவோரின் பிள்ளைகளில் கடந்த கல்வியாண்டில் 80 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்ற 4 மாணவ, மாணவியர்களுக்கும், ஆகமொத்தம் 62 நபர்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும் / முதன்மை செயலாளருமான மு.அ.சித்திக், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
இதுதவிர URC தனியார் முன்னிலை நிறுவனம் நடத்திய மட்டைபந்து (Cricket) போட்டியில் 16 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றனர். இதில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவின் மேலாளர் ரஞ்சித் தலைமையிலான கிரிக்கெட் அணி போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்றனர். இதற்கான பரிசு கோப்பையை மேலாண்மை இயக்குநரிடம் வழங்கி பாராட்டுப்பெற்றனர்.

tn

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), டி. அர்ச்சுனன் (திட்டங்கள்), டாக்டர். பிரசன்ன குமார் ஆச்சார்யா (நிதி), முதன்மை பாதுகாப்பு அதிகாரிஎச்.ஜெயலக்ஷ்மி, தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), கூடுதல் பொது மேலாளர்கள் டி. குருநாத் ரெட்டி, (ஒப்பந்த கொள்முதல்), டி.பி. வினோத் குமார் (மனிதவளம்), பொது ஆலோசக அணி தலைவர் டோனி புர்செல், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.
1