இந்திய ஒலிம்பிக் ஹவுஸை ஆக்கிரமித்த அம்பானியின் குடும்ப பெருமைகள்!
நாட்டின் பாரம்பரியம் பெருமையை பேச அமைக்கப்படும் இந்திய ஒலிம்பிக் ஹவுஸில் அம்பானியின் குடும்ப பெருமைகளே பெரிதும் இடம்பெற்றுள்ளன.
பாரிஸில் ஒலிம்பிக் நடைபெறும் வளாகத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் என்று ஒலிம்பிக் ஹவுஸ் உண்டு. பல்வேறு நாடுகளும் அதன் பாரம்பரியத்தின் அடிப்படையில் விடுதிகளை அமைத்துள்ளன. வளர்ந்த நாடுகளின் பழைய நாட்டுப்புற கட்டமைப்பு, பாரம்பரிய இசை, நடனம், உணவுப் பழக்கங்கள் என்று ஒவ்வொரு நாட்டு விடுதியிலும் அவரவர் நாட்டு மக்களை மகிழ்விக்க செய்யும் கலை அம்சங்கள் நிறைந்துள்ளன.
🔴நாட்டின் பாரம்பரியம் பெருமையை பேச அமைக்கப்படும் இந்திய ஒலிம்பிக் ஹவுஸில் நிரம்பி வழியும் அம்பானி குடும்ப பெருமைகள்!
— Spark Media (@SparkMedia_TN) August 9, 2024
🔹பாரிஸில் ஒலிம்பிக் நடைபெறும் வளாகத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் என்று ஒலிம்பிக் ஹவுஸ் உண்டு
🔹பல்வேறு நாடுகளும் அதன் பாரம்பரியத்தின் அடிப்படையில் விடுதிகளை… pic.twitter.com/79hBpObuEd
பழம்பெரும் நாடான இந்தியாவின் ஒலிம்பிக் ஹவுஸ் இவற்றைவிட கூடுதலான கலை அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து செல்லும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காரணம் இந்திய ஒலிம்பிக் ஹவுஸை பராமரிக்கும் முழு பொறுப்பை மத்திய அரசு அம்பானி குடும்பத்திற்கு கொடுத்தது தான். அதனால் முழுக்க முழுக்க அம்பானி நிறுவனத்தின் பெருமைகள், அதன் 'சமூக பணிகள்' என்று தற்பெருமை பேசுகின்ற விளம்பரங்கள் தான் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது