இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி..!

 
1

பல்லக்கேலே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பந்துவீச்சை தேர்வு செய்ய, இலங்கை அணி பேட்டிங் ஆடியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் சிறப்பாக ஆடிய நிஷானகா 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய குஷல் பெரேரா 53 ரன்கள் விளாசினார். குஷல் மென்டிஸ் தன் பங்குக்கு 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து இந்திய அணி 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேஸிங் இறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக யஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் கண்டனர். 3 பந்துகளில் இந்திய அணி 6 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு டக்வத் லூயிஸ் (DLS) முறைப்படி 08 ஓவர்களுக்கு 78 ஓட்டங்கள் பெற வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.8 ஓவர்களில் 78 ரன்கள் என திருத்தப்பட்ட இலக்கை இந்தியா 6.3 ஓவர்களில் எட்டியது.