குடியரசு தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா..!

 
குடியரசு தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா..! குடியரசு தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா..!


சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்டோர் குடியரசு தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

  விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா , அண்மையில் தனது சர்வதேச விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பினார்.   சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்திய விண்வெளி வீரராகவும் , 1981ம் ஆண்டுக்கு பிறகு விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்திய விண்வெளி வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில்  இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா. சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய சுக்லா மற்றும் இஸ்ரோ குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தனர்.  

குடியரசு தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா..!

இந்நிலையில் இன்று டெல்லி ரைசினா ஹில்ஸில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் , குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து நேரில் வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று வந்த அனுபவங்களை சுக்லா குடியரசு தலைவரிடம் பகிர்ந்து கொண்டார். மேலும் இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களுக்கு குடியரசு தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.