திமுகவிற்கு ஈடாக தற்பொழுது எந்தக் கட்சியும் இல்லை - காதர் மொய்தீன்

 
tn

நடிகர் விஜய்  தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் ,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

vijay

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியின் பெயர் நன்றாக இருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்.

tn

தமிழ்நாட்டில் பெயர்களை வைத்தோ, நடிகர்களை வைத்தோ மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கையை பின்பற்றும் கட்சியாக இருப்பது திமுகதான். பெரியார் போட்ட விதை. அதை அண்ணா, கலைஞர் பின்பற்றினர். திமுகவிற்கு ஈடாக தற்பொழுது எந்தக் கட்சியும் இல்லை. திடீரென ஒருவர் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.