பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப அறிவுறுத்தல்
பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகளாவர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பதற்றம் நீடித்துவரும் நிலையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கான விசா வரும் 27ம் தேதி முதல் செல்லாது என்றும் மருத்துவ காரணங்களுக்காக பெறப்பட்ட விசா வரும் 29ம் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்தியர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புமாறும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.


