விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட்..

 
விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட்..

150 சிறியரக செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 3,500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த செயற்கைகோள்களை இந்த ஹைபிரிட் ராக்கெட் சுமந்து சென்றது.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்துள்ளது.  செங்கல்பட்டு அருகே பட்டிப்புலம் கிராமத்தில் இருந்து காலை  8.15 மணியளவில் இந்த ஹைபிரிட் ராக்கெட்  ஏவப்பட்டது. இந்த வகையான ராக்கெட் குறைந்த உரத்தில் பறக்கக்கூடியது என்றும்,  செயற்கை கோள்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், தரவுகளை சேகரிப்பதற்காகவுமே  இந்த ராக்கெட் அனுப்பப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.  

விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட்..

இந்த ஹைபிரிட் வகை ராக்கெட்  'லைட் சவுண்ட் ராக்கெட்' என்று அழைக்கப்படுகிறது. ஹைபிரிட் ராக்கெட் 2.4 கிலோமீட்டர் உயரம் வரை மட்டுமே செல்லக்கூடியது ஆகும்.  இந்த ராக்கெட்டில்  இந்தியாவில் 20 மாநிலத்தை சேர்ந்த 3,500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த  150 சிறிய செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது.  இந்த  ஹைபிரிட்  ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரும்,  5,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.