பயணிகள் கடும் அவதி : இன்றும் 450 இண்டிகோ விமானங்கள் ரத்து..!
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வகுத்த புதிய விதிகளை அமல்படுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டபோதிலும், இண்டிகோ விமான நிறுவனம் அந்த விதிகளைச் செயல்படுத்தவில்லை. குறிப்பாக, போதிய விமானிகள் மற்றும் பணியாளர்கள் இல்லாமலேயே தனது சேவையைத் தொடர்ந்தது. இதன் காரணமாக, கடந்த 1-ம் தேதி முதல் இண்டிகோ விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
விமானிகள் பற்றாக்குறையால் இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவைகள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இன்று ஒரேநாளில் மட்டும் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கான சுமார் 450 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனினும், இண்டிகோ விமான சேவை இன்னும் ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று விமான நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


