"மனத் தூய்மையையும், உடல் தூய்மையையும் அளிக்கவல்லது யோகா" - ஓபிஎஸ், ஈபிஎஸ் வாழ்த்து

 
tn

உலக யோகா நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. யோகாசனங்களை மேற்கொள்வதன் மூலம் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன. மன அழுத்தம்,  நீரிழிவை தவிர்ப்பது,  உடல் ஆரோக்கியம் , உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைப்பது , நுரையீரல் பிரச்சனைகள்,  அல்சர் பிரச்சனைகள் , மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் யோகாசனம் செய்வதால் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.


இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், நம் எண்ணச் சிதறல்களை கட்டுப்படுத்தி அறிவாற்றலை பெருக்கி, மாறிவரும் வாழ்க்கை முறைக்கேற்ப நம் உடலின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்து கொள்ள, உலக யோகா தினமான இன்று, நாம் நாள்தோறும் யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளத்தையும், உடலையும், வலுப்படுத்திக் கொள்வோம் என்று உறுதியேற்போம். என்று குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "மனத் தூய்மையையும், உடல் தூய்மையையும் அளிக்கவல்லது யோகா. சர்வதேச யோகா தினமான இன்று அனைவருக்கும் எனது இனிய #YogaDay நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  யோகா செய்வோம்!  உடலை உறுதியாக்குவோம்! " என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.