5 கல்லூரி விடுதிகள், 2 கள்ளர் சீரமைப்புப் பள்ளி கட்டடங்கள் திறப்பு

 
th

முதலமைச்சர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ, மாணவியருக்காக 5 விடுதிக் கட்டடங்கள் மற்றும் 2 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு பணிகள் நிறைவுற்ற பள்ளிக்கட்டடங்களையும்  திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.11.2023) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 12 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக் கட்டடங்களையும் மற்றும் 2 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 6 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு பணிகள் நிறைவுற்ற பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

fb

மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவதை சிறப்பு நோக்கமாகக் கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1969-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையும், 1989-ஆம் ஆண்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தையும் ஏற்படுத்தினார். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அம்மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிட கல்வி உதவித் தொகை வழங்குதல், புதிய பள்ளி மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் சமூகநீதி கொள்கைகளை நிறுவுவதிலும், அதனை செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தல்

stalin

நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் 100 மாணவர் தங்கும் வசதியுடன், 2 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம்; பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்;புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதியில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், 2 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம்; திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், 3 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்;தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், 2 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்; என மொத்தம் 12 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டடங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் நிறைவுற்ற உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தல்

Stalin

மதுரை மாவட்டம்- கோவிலாங்குளம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் தெப்பத்துப்பட்டி ஆகிய இடங்களிலுள்ள 2 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்ட்) நிதி உதவியுடன் 6 கோடியே 51 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் அறிவியல் ஆய்வகங்கள், கூடுதல் கழிப்பறைகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ஆகிய நிறைவுற்ற உட்கட்டமைப்புப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.