'இன்னுயிர் காப்போம்' ரூ. 2 லட்சமாக உயர்வு!!

 
govt

2024 - 25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை பிப்ரவரி திங்கள் 19ஆம் நாள் சட்டமன்றப் பேரவை முன் வைத்து ஆற்றும் உரை :-

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!

2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை நூற்றாண்டு கண்ட இந்த சட்டமன்றப் பேரவையின் முன் வைப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்தியத் திருநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் இந்த வரவு-செலவுத் திட்டத்தை உருவாக்குவதில் தொடர் வழிகாட்டுதலை நல்கிய நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

tn

  • காலத்தை வென்ற அய்யன் திருவள்ளுவரின் குறளை இம்மன்றத்தில் பதிவு செய்து என் உரையைத் தொடங்குகிறேன்.
  • நிதிப்பற்றாக்குறை ரூ.94,060 கோடியாக உயரும்.
  • மூலதன செலவினங்கள் ரூ.47,681 கோடியாக அதிகரிப்பு.
  • மதி இறுக்கம் (Autism) உடையோருக்கு ரூ.25 கோடியில் உயர்திறன் மையம்.
  • ‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ், விபந்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
  • 500 புதிய மின் பேருந்துகள் வாங்கப்படும்.
  • விரைவான வானிலை முன்னறிவிப்புகளை பெற இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

assembly

  • 1,400 புதிய தானியங்கி மழைமானிகளையும், 100 புதிய தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவ ரூ.32 கோடி நிதி ஒதுக்கீடு.
  • வெள்ளம், நில அதிர்வு உள்ளிட்டவற்றை கண்காணித்து பேரிடர் அபாய அளவை குறைக்க தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.
  • வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த ராமாநதபுரம் மற்றும் ஏற்காடு ஆகிய 2 இடங்களில் இரண்டு சி-பேண்ட் டோப்ளர் ரேடார்கள் (Doppler Radar) ரூ.56 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.
  • இன்னுயிர் காப்போம் திட்டத்தில் லவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ரூ.2லட்சமாக உயர்ந்துள்ளது. விபத்து நடந்து 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.