“இவன் தான் என் சாவுக்கு காரணம்”- இன்ஸ்டா பிரபலம் இலக்கியா தற்கொலை முயற்சி!
இன்ஸ்டா பிரபலம் இலக்கியா அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சித்துள்ளார்.
ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் என் சாவுக்கு காரணம் என இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்ட இலக்கியா, அடுத்த சில நிமிடங்களில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சித்துள்ளார். திலீப் சுப்பராயன் தன்னுடன் ஆறு வருடங்களாக நெருங்கி பழகிவிட்டு, தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாகவும் இலக்கியா குற்றம்சாட்டியுள்ளார். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இலக்கியா, பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிறைய பெண்களுடன் திலீப் சுப்பராயனுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனை எதிர்த்து கேட்டால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் இலக்கியா கூறியுள்ளார்.


