ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீஸுக்கு இடைக்கால தடை..!!

 
ஜெகத்ரட்சகன் ஜெகத்ரட்சகன்

எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு எதிடான அமலாக்கத்துறை நோட்டீஸ்க்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

சிங்கப்பூரின் சில்வர் பார்க் நிறுவன பங்குகளை வாங்கியதில் அன்னிய செலாவணி சட்ட விதிகளை ஜெகத்ரட்சகன் எம்.பி மீறியதாக  அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முன்வைத்தது. அதாவது  சிங்கப்பூரை சேர்ந்த அந்நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை ரூ.32.69 கோடிக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி வாங்கியதாகவும், அவ்வாறு வாங்கிய பங்குகளை ரிசர்வ் வங்கி ஒப்புதலின்றி தனது மனைவியின் பெயருக்கு மாற்றியதாகவும் அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது. இதனையடுத்து  அன்னிய செலாவனி சட்டத்தை மீறியது தொடர்பாக பதில் அளிக்கக்கோரி,  ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.  

  உச்சநீதிமன்றம்

இதனையடுத்து  அமலாக்கத்துறையின் நோட்டீஸை எதிர்த்து ஜெகத்ரட்சகன் எம்.பி,   சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்தார்.  ஆனால் அந்த மனுவை  சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தை நாடினார் ஜெகத்ரட்சகன். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நிதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது  உச்ச நீதிமன்றம் ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.