ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Jun 27, 2024, 10:45 IST1719465321990
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20-ம் தொடங்கிய நிலையில் 29-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 16 அமர்வுகளில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்
▪️ தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது.

▪️ இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
▪️ 2022-ம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது.
▪️ ஒசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.
▪️ திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.


