ஆவினில் நூடுல்ஸ் உள்ளிட்ட 5 புதிய பொருட்கள் அறிமுகம்!

 
ttn

தமிழக அரசின் ஆவினில் நூடுல்ஸ் உள்ளிட்ட 5 புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் 5 லட்சம் ஆவின் அட்டைதாரர்கள் உள்ளனர். ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்கள் குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

aavin

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் ஏற்கனவே பால் குலோப் ஜாமுன், பால்கோவா ,ஐஸ்கிரீம் , நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனையில் உள்ளன. இந்நிலையில் ஆவினில் புதிதாக தயாரிக்கப்பட்ட, “ப்ரிமியம் மில்க் கேக், யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒயிட்னர்  ஆகிய 5 புதிய பொருட்களை  தலைமை செயலகத்தில் அறிமுகம் செய்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

aavin

பிரீமியம் மில்க் கேக் 250 கிராம் ரூபாய் 100,  யோக்கட் ட்ரிங்க்ஸ் 200 மில்லி லிட்டர் ரூபாய் 25, பாயாசம் மிக்ஸ் 100 கிராம் 50 ரூபாய், 200 கிராம் 100 ரூபாய், பால் புரத நூடுல்ஸ் 70 கிராம் 10 ரூபாய், டெய்ரி ஒயிட்னர் 20 கிராம் 10 ரூபாய் ,200 கிராம் 80 ரூபாய், 500 கிராம் 200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.