அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

 
anna anna

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தினர்.  

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என  எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஆளுநரை சந்தித்தார்.
   
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தினர். 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. சிறப்பு புலனாய்வு குழுவிடம் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அண்ணாநகர் துணை ஆணையர் சிநேக பிரியா, ஆவடி துணை ஆணையர் ஜமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் விசாரணை நடத்தினர்.