பூமிக்கு அடியில் ‘ஏவுகணை நகரம்’ அமைத்த ஈரான்!
Mar 27, 2025, 07:00 IST1743039052000
ஆயிரக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில் ஈரான் ராணுவம் சேமித்து வைத்துள்ளது. இந்த ‘ஏவுகணை நகரம்’ தொடர்பான வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
ஈரான் தனது அணுசக்தி அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு எச்சரித்திருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக ஈரான் அரசு தற்போது தங்கள் ராணுவ பலத்தை வெளிக்காட்டும் 85 வினாடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளது.
இன்று தொடங்கி அடுத்த 2 ஆண்டுகளுக்கு, வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கை ஆட்டிப்படைக்க நினைக்கும் மேற்கு நாடுகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.


