#BREAKING இயக்குனர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை

 
இயக்குனர் வெற்றிமாறன் ரூட்டுக்கு டிராக் மாறிய; லிங்குசாமி!? இயக்குனர் வெற்றிமாறன் ரூட்டுக்கு டிராக் மாறிய; லிங்குசாமி!?

காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேல்முறையீடு செய்து சட்டரீதியாகச் சந்திப்போம் - இயக்குனர் லிங்குசாமி |  Tamil cinema director lingusamy appeal to court

இது தொடர்பாக அல்லிக்குளம் நீதி மன்ற வளாகத்தில் லிங்குசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மெசர்ஸ் பேஸ்மேன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் வழக்கறிஞர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், எழும்பூர்  அல்லிக்குளம் 19 ஆம் நீதிமன்றத்தில் இன்று திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின்  இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவருடைய சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடைய வழக்கு நடத்தப்பட்டது , கடந்த எட்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டது , 2016 ஆம் ஆண்டில்  மெசர்ஸ் பேஸ்மேன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் திருப்பதி பிரதர் ஃபிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு, அதன் நிர்வாக இயக்குநர் லிங்குசாமி மற்றும்  சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு வணிக மேம்பாட்டிற்காக ரூ.35,00,000 தொகையை கடனாக வழங்கியது , பல ஆண்டுகள் கடனை திருப்பி கொடுக்கும்படி கேட்டும் காலம் தாழ்த்தி வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு வட்டியுடன் கடன் தொகை ரூ.48,68,000 கொடுக்குமாறு நிறுவனத்தின் சார்பில் கேட்ட பொழுது இயக்குனர் லிங்குசாமி கொடுத்த காசோலை பணமின்றி திரும்பியது இதன் காரணமாக நிதி நிறுவனத்தின் சார்பில் 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் இன்றைய தினம் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இயக்குனர் லிங்குசாமி மற்றும் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் சிறை தண்டனையும் இரண்டு மாதத்திற்குள் கொடுத்த கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தாவிட்டால் மேலும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனையில் அதிகரிக்கும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இரண்டு மாதங்களுக்குள் கொடுக்க வேண்டிய கடன் தொகை 48 லட்சத்தி 68 ஆயிரம் ரூபாய் வழங்கினால் ஒரு வருட சிறை தண்டனை ரத்து செய்யப்படும் தற்பொழுது திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் மேல்முறையீடு அளிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது , மேல் முறையீடு அளித்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம் எனவும்  மெசர்ஸ் பேஸ்மேன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.