"கேட்ட பணத்தை தராததால் நீக்கம்... தவெக மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடி" - பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

 
ச் ச்

சீர்காழியில் த.வெ.க மாவட்ட  மகளிர் அணி இணை அமைப்பாளர்கள் நியமனத்தில் குளறுபடி நடந்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக வெற்றி கழகம் மயிலாடுதுறை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மற்றும் 10 இணை அமைப்பாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு தமிழக வெற்றி கழகம் தலைமை அறிவித்து அண்மையில் பட்டியல் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தலைமை அறிவித்த மகளிர் அணி இணை அமைப்பாளர்கள் பட்டியலில் இருந்து 7 பேரை நீக்கி மாவட்ட அமைப்பாளர் தனலட்சுமி தனக்கு ஆதரவான மாற்று  7 மகளிரின் பெயர்களை சேர்த்து  தலைமை அறிவித்த பட்டியலாக மாற்றி அமைத்த பட்டியலை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மாற்றி அறிவித்துக் கொண்ட பட்டியலில் உள்ளவர்களின் புகைப்படங்களுடன் மகளிர் அணி அமைப்பாளர் தனலட்சுமி நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் மற்றும் டிஜிட்டல் பதாகைகள் அமைத்துள்ளதாக இணை அமைப்பாளர் சசிகலா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தனலட்சுமி மற்றும் த.வெ.க மயிலாடுதுறை மாவட்ட  செயலாளர் குட்டி கோபி ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.