மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான்.. யூடியூபர் இர்பானிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ்.. !!

 
Youtuber Irfan Youtuber Irfan

குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ள யூடியூபர் இர்ஃபான் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் ஆளிக்கப்பட்டுள்ளது. 

யூடியூபர் இர்பான் உணவுகளை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு இணையத்தில் பிரபலமானவர். உள்ளூர் முதல் வெளிநாடு வரை சென்று புட் ரிவ்யூ செய்து வரும் இர்பான் சமீபத்தில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இவர் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 2023 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்த நிலையில் ஹசீஃபா - இர்பான் தம்பதிக்கு கடந்த ஜூலை 24ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.  முன்னதாக ஹசீஃபா இர்பான் துபாய்க்கு மனைவியை அழைத்து சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டதோடு  அதனை தன் நண்பர்களுடன் இணைந்து இதை கொண்டாடியுள்ளார்.

youtuber irfan baby

அந்த  வீடியோவை அவர் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரம்  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உடனே இர்பான் சம்பந்தப்பட்ட வீடியோவை டெலிட் செய்ததுடன், இச்செயலுக்காக மன்னிப்பு கோரினார். இந்நிலையில் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.  அப்போது அறுவை சிகிச்சை அரங்கில் மனைவியுடன் இருந்தபோது, குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியுள்ளார். அதனை வீடியோவாக பதிவுசெய்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

இது மருத்துவ விதிகளின் படி குற்றம் என மருத்துவர்களஃ கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஊரக நலப்பணிகள் இயக்குனரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் டிஎம்எஸ் மருத்துவமனை மற்றும் இர்ஃபானிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.