பெரியார் கொள்கை...மோடியின் பயோபிக் - சத்யராஜ் குறித்த முக்கிய அப்டேட்!!
May 18, 2024, 13:16 IST1716018360306
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடியாக நடிக்க, நடிகர் சத்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் பயோபிக் கதைகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்படும் படங்களும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடியாக நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது. கொள்கை ரீதியாக பெரியாரை பின்பற்றும் சத்யராஜ் மோடியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


