தவெக நிர்வாகி திருமணத்தில் இப்படியொரு ட்விஸ்ட்டா? மணப்பெண் மயங்கியும் ஃபோட்டோ ஷூட் நடத்திய தவெக கொள்கை பரப்பு செயலாளர்!
மதுரையைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அருண்ராஜ் மணமகனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்துக் கொண்டிருந்தபோது, அருகில் நின்றிருந்த மணப்பெண் எதிர்பாராதவிதமாக திடீரென மயங்கி விழுந்தார்.
மயங்கிய மணப்பெண்ணுக்கு முதலுதவி அளிக்க அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மணமகனை மட்டும் நிறுத்தி மொய்ப்பணத்தை அளித்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டார் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ்.இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
#WATCH | மதுரை தவெக நிர்வாகி திருமண விழாவில் மணமேடையிலேயே மயங்கி விழுந்த மணப்பெண்
— Sun News (@sunnewstamil) February 20, 2026
மயங்கிய மணப்பெண்ணுக்கு முதலுதவி அளிக்க அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மணமகனை மட்டும் நிறுத்தி மொய்ப்பணத்தை அளித்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டார் அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ்… pic.twitter.com/WenDcPleZW

