விஜய்யின் தவெக திமுகவுக்குப் போட்டியா? - உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதில்!
தேர்தலில் தி.மு.க.வுக்கு பிராதன எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு இப்போது வரை வலுவான போட்டியாளர் என யாரும் எனக்கு தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நாங்கள் பா.ஜ.க.வையும் அதன் அனைத்து பி டீம்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் மதசார்பற்ற சக்திகளை பலவீனப்படுத்த பா.ஜ.க. அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்பதை அறிந்தே இருக்கிறோம். தமிழக மக்கள் பா.ஜ.க.வின் சதியை அறிந்து அதை தோற்கடிப்பர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகள் அனைத்து டெல்லியில் எடுக்கப்பட்டு தமிழக கட்சிகளின் மீது திணிக்கப்படுகிறது. நீண்ட காலமாக எங்கள் பிரதான போட்டியாளராக அ.தி.மு.க. இருந்தாலும், இப்போதைய நிலையில் பலம் வாய்ந்த போட்டியாளர் யாரும் இருப்பதாக நான் கருதவில்லை. பலவீனமான நிலையில் அ.தி.மு.க. இருந்தாலும், அதைத்தான் பிரதான எதிர்க்கட்சியாக நாங்கள் பார்க்கிறோம். அவர்கள் தான் எங்களது போட்டியாளர்.
இவ்வாறு அவர் கூறினார்


