வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா? சரிபார்ப்பது எப்படி?

 
ச் ச்

தமிழ்நாட்டில் இருந்து எஸ் ஐ ஆர் நடவடிக்கைகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். சரியாக சொல்ல வேண்டுமென்றால் 97,37,832 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா? சரிபார்ப்பது எப்படி? என பலருக்கும் சந்தேகங்கள் இருக்கலாம். அதன்படி, https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதள முகவரியில் சரிபார்க்கலாம். முதலில் இந்த லிங்க்கை க்ளிக் செய்து அதில் Search by EPIC என்பதை க்ளிக் செய்யுங்கள். அடுத்து மொழியை தேர்ந்தெடுக்கவும். அதன்பின் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிடவும், பின்னர் மாநிலத்தையும், அதன்பின் கீழே உள்ள கேப்சா கோட்டையும் சரிபார்த்துவிட்டு Search என்பதை க்ளிக் செய்யுங்கள். இவற்றை சரியாக செய்தால், உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என அர்த்தம்... உடனே அவர்கள் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.