ஆக.15 முதல் திருப்பதி மலைப்பாதையில் பயணிக்க இது கட்டாயம்..!!

 
ஜனவரி மாதம் முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம்! ஜனவரி மாதம் முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம்!

 திருப்பதி மலைப்பாதையில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இனி ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்படுள்ளது.  

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு திருப்பதி மலைப்பாதை வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.  நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வாடகை மற்றும் சொந்த வாகனங்களில் திருப்பதி கோவிலுக்கு வருவது வழக்கம்.  அவ்வாறு வரக்கூடிய பக்தர்களுக்கு உடைமைகள் சோதனை செய்த பிறகும்,  சாலையில் செல்வதற்கான அலிபிரி சோதனைச் சாவடியில் சுங்க கட்டணம் செலுத்திய பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  ஆனால் இந்த நடைமுறயால்  கூட்ட நெரிசல் அதிகமாக ஏற்படுவதோடு,  சில நேரங்களில் பக்தர்கள் வாகனங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.  

திருப்பதி

இதனால் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பாஸ்டேக் இருந்தால் மட்டுமே கட்டாயமாக வாகனங்கள் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் பாஸ்டேக் இல்லாத வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் மலைப்பாதையில் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவ்வாறு ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்காக அலிபிரி சோதனை சாவடியில், ஐசிஐசிஐ வங்கியின் உதவியுடன்  ஃபாஸ்டேக் பெறுவதற்கான தனி கவுன்ட்டர்கள்  அமைக்கப்படுகிறது.