மாணவர்கள் இதுபோல் தவறான முடிவை எடுக்க கூடாது - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

 
gk vasan

நீட் மாணவர் தற்கொலை செய்துகொண்டது மிகவும் வருந்ததக்கது;  மாணவர்கள் இதுபோல் தவறான முடிவை எடுக்க கூடாது  என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்த திரு. ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் அவரின் இழப்பை தாங்கிகொள்ள இயலாமல் தந்தையும் தற்கொலை செய்துகொண்டது மிகவும் வருந்ததக்கது.

tn

அகில இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறார்கள். அதோடு வருடம் தோறும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வரும் வேலையில், இதுபோன்று தற்கொலை செய்துகொண்ட மாணவரின் செயல் மிகவும் வருந்ததக்கது. வெற்றிவாய்பை இழந்த மாணவர்கள் மீண்டும், கடின உழைப்பையும், முயற்சியையும் மேற்கொண்டால் வெற்றி பெற முடியும் அதற்கு ஆசியர்களும், பெற்றோர்களும் துணை நிற்க வேண்டும்.

neet

மாணவர்கள் எடுக்கும் முயற்சி கடினமாக இருந்தால் அவர்களை வேறு துறையில் கல்வி கற்க உரிய ஆலோசனையையும், தன்னம்பிக்கையும் பெற்றோர்கள் அளிக்க வேண்டும். இதுபோல் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது. விடா முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.
வருங்காலங்களில் மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவை எடுக்க கூடாது. கல்விகற்கும் காலத்திலேயே மாணவர்களுக்கு உரிய ஆலோசனையையும், தன்னம்பிக்கையும், வழிகாட்டுதலையையும் ஆசிரியர்கள் போதிக்க வேண்டும்.திரு. ஜெகதீசன் மற்றும் அவரது தந்தையையும் இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.