மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு

 
ITRaid ITRaid

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள பசுமை எரிசக்தி பிரிவில் சோதனை நடக்கிறது. TDS பிடித்தம் செய்வதில் குளறுபடி இருப்பதாக வருமான வரித்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரில், விசாரணை நடந்துவருகிறது. சோதனை நடைபெறவில்லை, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை தான் மேற்கொண்டுவருகின்றனர் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.