Good Bad Ugly, புஷ்பா-2 தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
Jan 21, 2025, 11:06 IST5:36:57 AM

Good Bad Ugly, புஷ்பா-2 படங்களின் தயாரிப்பாளர் மைத்ரி நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வாரிசு' பட தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் உள்ள தில் ராஜு வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் 55 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. புஷ்பா-2 படத்தின் தயாரிப்பாளரான மைத்ரி நவீனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி செர்ரி ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பஞ்சாரா ஹில்ஸ் மற்றும் ஜூப்ளி ஹில்ஸ் பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது. பஞ்சாரா ஹில்ஸ் மற்றும் ஜூப்ளி ஹில்ஸ் பகுதிகளில் அதிகாலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.