சென்னையில் அமைச்சருக்கு சொந்தமான ஹார்டுவேர் வணிக வளாகத்தில் ஐடி ரெய்டு!
Updated: Jan 20, 2026, 22:01 IST1768926660131
சென்னை கொடுங்கையூரில் உள்ள A-ONE ஹார்டுவேர் என்ற வணிக வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

சென்னை கொடுங்கையூரை அடுத்த எம்.ஆர்.நகர் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள A-ONE ஹார்டுவேர் என்ற வணிக வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இந்த வணிக வளாகம் அமைச்சர் ஒருவருக்கு தொடர்புடையது எனக் கூறப்படுவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.


