பதவியின் மதிப்பை குறைத்துவிடும்.., பேரா. பெரியசாமியை நீக்குக - அன்புமணி ராமதாஸ்..

 
anbumani anbumani

சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பேராசிரியர் பெரியசாமியை நீக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பெரியசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இது கண்டிக்கத் தக்கது! பேராசிரியர் பெரியசாமி போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது குறித்த புகார் மீது தமிழக அரசு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

salem periyar university

இப்படிப்பட்ட ஒருவரை பொதுக்குழு உறுப்பினராக நியமித்தால், அது சாகித்ய அகாடமியின் மதிப்பைக் குறைத்துவிடும். சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பேராசிரியர் பெரியசாமியை நீக்க வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தமிழ்நாடு அரசின் விசாரணையை விரைந்து நடத்தி, சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.