மோடி பயோபிக்கை இவர்கள் எடுத்தால் நன்றாக இருக்கும் - நடிகர் சத்யராஜ்
Updated: May 29, 2024, 14:55 IST1716974715093
மழை பிடிக்காத மனிதன் பட விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிப்பதற்காக எந்த தயாரிப்பு நிறுவனமும் என்னை அணுகவில்லை, இது வெறும் வதந்தி.

பிரதமர் மோடி பயோபிக்கில் நடிக்க என்னிடம் யாரும் கேட்கவில்லை. அப்படியே நடித்தாலும் மறைந்த என் நண்பர் மணிவண்ணன் போன்ற ஒரு இயக்குனர் அவரது பயோபிக் எடுத்தால் நன்றாக இருக்கும்.

இல்லை என்றால் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் போன்றோர் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.


