700 வருட பழமையானது... அரிய வகை கல் ஒன்றை வீ்ட்டு வாசலில் படிக்கட்டுக்காக பயன்படுத்திய பெண்மணி!

 
1

தென்கிழக்கு ருமேனியாவில் உள்ள கோல்டி கிராமத்தில், ஒரு வயதான பெண் வசித்து வந்தார். அவர் தனது வீட்டில் ஒரு அதிர்ஷ்டக் கல்லை அறியாமல் பயன்படுத்தியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக விலைமதிப்பற்ற பொருள் குறித்து அவருக்கு தெரியாது. ஒரு நாள் அவர் தனது வீட்டின் அருகே உள்ள ஓடையில் இருந்து ஒரு பளபளப்பான கல்லைக் கொண்டு வந்தார். பின்னர், அதைத் தனது வீட்டின்  வாசல் படியில் பயன்படுத்தினார்.

அதாவது, அந்த மூதாட்டி தனது வீட்டில் வைத்திருந்த கல், உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அம்பர் நக்கட்களில் ஒன்றாகும். இதன் எடை 3.5 கிலோ. இந்த கல்லின் மதிப்பு சுமார் 1.1 மில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் 9.2 கோடி ரூபாய். உலகில் மொத்தம் 160 ஷேட்களில் ஆம்பர் நக்கட்கள் கிடைக்கிறது. இந்த கல் ஒரு கருப்பு அம்பர் கட்டி. முக்கியமாக மூதாட்டி வீட்டில் கொள்ளையடிக்க வந்தவர்களும் தெரியாமல் சென்றுவிட்டனர். பின்னர் அந்த கல்லை பார்த்த உறவினர் ஒருவர் சந்தேகம் அடைந்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

அப்போதுதான் அம்பர்  நக்கட்  கண்ணாடி என்பது தெரிய வந்தது. இதையறிந்த ரோமானிய அதிகாரிகள், மூதாட்டி வீட்டில் வைக்கப்பட்டிருந்த கல்லை வாங்கி தேசிய பொக்கிஷமாக அறிவித்தனர். இதற்குப் பிறகு, இந்த கல் 38.5 முதல் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கண்டறிந்தனர். தற்போது, சாவ் மாகாண அருங்காட்சியகத்தில் இந்த கல் வைக்கப்பட்டுள்ளது.