புளியங்காய் பறிக்க சென்றவர் உயிரை விட்ட பரிதாபம்

 
ச்

கோவையில் புளியங்காய் பறிக்க சென்றவர், குடும்பத்தினர் கண் முன் மின் கம்பியில் சிக்கி உடல் கருகி பலியானார்.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (66). இவர் அதே பகுதியில் கோவை -  சத்தி தேசிய நெடுஞ்சாலையில் மரம், செடி  ஆகியவற்றை விற்கும் நர்சரி தொழில் செய்து வருகிறார். அன்னூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையை அகலப்படுத்தும் பணி சரவணம்பட்டி- கரட்டு மேட்டில் இருந்து கோவில்பாளையம் வரை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறையால் நடைபெற்று வருகிறது. இதில் கோவில்பாளையம் மற்றும் குரும்பபாளையம் பகுதிகளுக்கு இடையே உள்ள புளிய மரங்களை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் தயாராகி வந்தனர். அப்போது சம்பத்குமார் என்பவரின் நர்சரி எதிரே உள்ள புளிய மரத்தில் கிளைகளில் உள்ள புளியங்காய்கள் பறிக்கும் நிலையில் இருந்துள்ளது.


இதை பறிப்பதற்காக சம்பத்குமார் தனது மனைவி பிரேமலதா, தங்கை சாரதா ஆகியோருடன் இணைந்து புலியங்காய் பறிக்க சென்றுள்ளனர். அப்போது சம்பத்குமார் புளிய மரத்தில் ஏறி இறும்பு கம்பி மூலம் ஒரு கிளையில் உள்ள புளியங்காயை பறித்து கொண்டிருந்துள்ளார். அப்போது புளியங்காய் மரக்கிளை முறிந்து, உயர் மின்னழுத்தம் கொண்ட மின் கம்பி மீது விழுந்துள்ளது. இதில் நிலை தடுமாறிய சம்பத்குமார் இரும்புக் கம்பியுடன் உயர் மின்னழுத்தம் சென்று கொண்டு இருந்த கம்பி மீது விழுந்த இரும்பு கவிட்டியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து புளிய மரத்திலேயே குடும்பத்தினரின் கண்முன் உடல் கருகிய நிலையில் சம்பத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்பு துறை ஆகியவற்றுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உயிர் மின்னழுத்த மின்சாரத்தை துண்டித்து மரத்தில் கருகிய நிலையில் இருந்த சம்பத்குமாரை மீட்டனர். பின்னர் சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனைக்கு சம்பத்குமாரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸ் எஸ்ஐ செந்தில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement