இன்னும் 1 கிலோமீட்டர் தான்... பிரச்சார பகுதியை நெருங்கினார் விஜய்..!
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள மக்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘உங்கள் விஜய் நான் வரேன்’, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது' என்ற பேரில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கினார்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் குறிப்பிட்ட மாவட்டங்கள் என டிசம்பர் மாதம் இறுதி வரை தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும் விஜய், இதுவரையில் திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் தனது பிரச்சாரத்தை முடித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தமது மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அவர் தொடங்கி உள்ளார்.
கரூர், வேலுச்சாமிபுரத்தில் இன்று பிற்பகலில் விஜய் பிரசாரம் செய்யாவுள்ள நிலையில், வேலுச்சாமிபுரம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.தவெக தலைவர் விஜய் வளையப்பட்டி பகுதிக்கு வந்துள்ள நிலையில் பேருந்தை சூழ்ந்து ஆரவாரம் செய்யும் தொண்டர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்லில் காலை 11-12 மணி வரை பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி அளித்த நிலையில் விஜய் பிரசாரத்திற்கு நாமக்கல் காவல்துறை அளித்த நேரம் கடந்தது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் பிரசார பகுதிக்கு விஜய் வரவில்லை. நாமக்கல் எல்லையில் மக்கள் வெள்ளத்தில் விஜய் வாகனம் ஊர்ந்து வருகிறது.
இன்னும் 1 கிலோமீட்டர் தான் உள்ளது... இன்னும் சற்று நேரத்தில் தவெக தொண்டர்கள் மத்தியில் பேச உள்ளார் விஜய். பிரச்சார இடத்தை நெருங்க நெருங்க தொண்டர்கள் கூட்டமும் குவிந்து வருகிறார்கள்


