இது செயற்கை மின்வெட்டு.. ஊழல் செய்ய திமுக போடும் திட்டம்.. - அண்ணாமலை காட்டம்..

 
அண்ணாமலை

ஊழல் செய்வதற்காக தமிழ்நாட்டில் செயற்கையாக மின்வெட்டை உருவாக்கி, மத்திய அரசின் மீது பழி போடுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.  

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்தியாவிலேயே மிகப்பெரும் நஷ்டத்தில்  நிறுவனங்களில்  தமிழ்நாடு மின்சார வாரியம் தான் முதலிடத்தில் இருக்கிறது.   மின்சார துறை என்பது  எந்த அமைச்சர் வந்தாலும் பணம் சம்பாதிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள துறையாக மாறியிருக்கிறது.   அதனால்தான் தற்போது அந்தத்துறை  பல லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளது.  மின்சார வாரியத்தை தமிழக ஆட்சியாளர்கள் . இத்தகையநிலைக்கு  கொண்டுவந்துவிட்டு, மத்திய அரசின் மீது பழியை துக்கிப் போடுகிறார்கள்.

This is the plan of the DMK to commit artificial electricity scam - Annamalai

இந்தியாவில்  வேறு எந்த மாநிலத்திலும் 2 முதல் 3 மணி நேரம்  மின்வெட்டே  இல்லை என்கிறபோது, தமிழகத்தில் மட்டும் 8 முதல் 10 மணி நேரம் மின் வெட்டு செய்யப்படுகிறது..  யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.   மேலும் தமிழகத்தில் கடந்த 20-ம்தேதி தூத்துக்குடி அனல்  மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின் உற்பத்தி செயல்படவில்லை. ஆனால் போதுமான மின் தேவை இல்லாததால் நிறுத்தியுள்ளோம்  என தமிழ்நாடு மின் வாரியம் மத்திய அரசின் நிறுவனமான பவர்கிரிட் நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது.  அன்றைய தினம் ( 20-ம் தேதி )  5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் இருந்தும் தூத்துக்குடி அனல்  மின் நிலையத்தில் உற்பத்தியை  நிறுத்தி  வைத்திருந்தது ஏன் ? என்றும் அண்ணாமலை கேள்வியெழுப்பினார்.  

அண்ணாமலை

தமிழகத்தில் செயற்கையாக மின்வெட்டை உருவாக்கி, அதன் மூலம் திமுக  தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி லாபம் பார்ப்பதாக குறிப்புட்ட அவர், அது திமுகவுக்கு கை வந்த கலை என்றும் கூறினார்.  கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாடு மின்வாரியம்   ரூ. 2 ஆயிரம் கோடிக்கும் மேல்  தனியாரிடமிருந்து மின்சாரம்  வாங்கியதாகவும், திமுகவின் நோக்கமே தனியாரிடமிருந்து மின்சாராத்தை வாங்கி ஊழல் செய்துவதுதான் என்று கூறினார்.  மேலும்  சொந்தமாக மின் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை திமுக மேற்கொள்ளவில்லை என்றும், மத்திய அரசைப் பொறுத்தவரை எந்த மாநிலத்துக்கும் நிலைக்கரியை குறைவாக கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை என்றும் கூறினார்.