ஜாக்டோ - ஜியோ ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

 
tn

நாளை அறிவித்திருந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வாபஸ் பெற்றனர்.

govt

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்தனர்.  அத்துடன் நாளை  ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும்  ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். இந்த சூழலில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 15ம் தேதி அன்று அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து ஜாக்டோ - ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் தலைமை செயலகத்தில் சந்திப்பு நடத்தினர்.  நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த நிலையில் சந்திப்பு நிகழ்ந்தது.

tn

இந்நிலையில் நாளை நடைபெற இருந்த ஜாக்டோ - ஜியோ ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ - ஜியோ அறிவித்து இருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றனர்.