ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகள் முடக்கம்!

 
jaffer jaffer

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஜாபர் சாதிக்கின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக  சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்த கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தலுக்கு பின்னால் திரைப்படதயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திமுகவிலிருந்து ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார். இதனிடையே ஜாபர் சாதிக் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஜாபர் சாதிக்கின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், முதற்கட்டமாக 8 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.