உயிருக்கு போராடும் ஜெய்பீம் நடிகர் - உதவி கேட்டு உருக்கம்!
நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி புற்றுநோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தன்னுடைய சிகிச்சைக்காக உதவி கேட்டுள்ளார்.
இவர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், பின்னர் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிக துவங்கினார். இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்னரே கேன்சர் இருப்பது கண்டுபிடிக்காட்டதாக கூறப்படுகிறது. தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 4ஆம் நிலை புற்றுநோயிக்கான சிகிச்சை பெற்று வரும் இருந்த, தன்னுடைய மருத்துவ செலவுகள், மற்றும் குடும்ப பராமரிப்பிற்கு பணம் இன்றி தவித்து வருகிறார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றி... பலருக்கும் மிகவும் பரிச்சியமான நபராக இருக்கும் சூப்பர்குட் சுப்பிரமணி நண்பர்கள் மூலம் பொருளாதார உதைவியை நாடியுள்ளார். இவருக்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்த பலர் தங்களால் ஆன உதவியை இவருக்கு செய்து வருகிறார்கள். நடிகர் சங்கம் மற்றும் முன்னணி நடிகர்கள் சிலர் இவருக்கு உதவி வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. சூப் குட் சுப்பிரமணி நடித்த மகாராஜா, சூரரை போற்று, ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை, போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


