விநாயகர் கோவிலில் காளை சிலையை வைத்து சிறப்பு வழிபாடு - பாஜக நிர்வாகி தகவல்

 
bjp

தமிழகத்தில் பல ஆண்டுகால தடைபட்டுநின்ற ஜல்லிக்கட்டை மக்கள் போராட்டத்திற்கு மதிப்பளித்து இரவோடு இரவாக அவசரச்சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிய பாரதப்பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு காளை சிலையை நினைவுப்பரிசாக தமிழக விவசாயிகள் சார்பாக மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் வழங்கினார்.

BJP

இதுகுறித்து பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் அவர்கள் கூறியதாவது;-
தமிழ்நாட்டில் மீண்டும் ஜல்லிக்கட்டு புத்துயிர் பெற காரணமாக இருந்தவர் பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி.அவர் தமிழகம் குறிப்பாக கொங்குமண்டலத்தில் அவரை கௌரவிக்கும் விதமாக ஜல்லிக்கட்டு காளையை நினைவுப்பரிசாக வழங்கலாம் என்று விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தலைவர்களுடன் அமர்ந்து திட்டமிட்டோம்.ஆனால் பாதுகாப்பு காரணங்களால் உயிருள்ள காளையை வழங்க இயலாது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்த பின்னர், போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு கும்பகோணத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு காளை தயார்செய்யப்பட்டது.12 கிலோ எடைகொண்ட இந்த சிலை எப்போதும் புதுப்பொலிவுடன் ஜொலிக்கக்கூடியது.அதற்கு மேலும் அழகூட்டும் விதமாக வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய மணியுடன் கூடிய கழுத்துப்பட்டையும் தயார்செய்து அணிவிக்கப்பட்டது.

tn

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிறக்க வேண்டும்.விவசாய பூமியை வளப்படுத்தும் நாட்டுமாடுகளின் எண்ணிக்கை பல்கிப்பெருக வேண்டுமென உழவாலயம் விநாயகர் கோவிலில் காளை சிலையை வைத்து சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது.மூத்த விவசாயாக, விவசாய சங்கத்தலைவராக திரு.நாராயணசாமி நாயுடுவாக இணைந்து பணியாற்றிய பெருமையோடு ஜல்லிக்கட்டு காளை சிலையை மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களோடு இணைந்து பாரதப்பிரதமருக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார் சொல்லேர் உழவன் திரு.செல்லமுத்து. இதைமகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட பாரதப்பிரதமர் தமிழ்நாட்டின் பெருமைமிகு கலாச்சாரத்தோடு தொடர்புடைய ஜல்லிக்கட்டு மிகுந்த உற்சாகத்துடன் தொடர்வதை எனக்கு வழங்கப்பட்ட இந்த சிலை உறுதிசெய்கிறது.அதை நான் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டேன் என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.