திடீரென நிறுத்தப்பட்ட 'ஜனநாயகன்' படப்பிடிப்பு

 
அ அ

விஜயின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் மழை, ரசிகர்கள் மழையை பொருட்படுத்தாமல் விஜயை காண காத்திருக்கின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். உச்சநட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு அவர் இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பதாக அறிவிப்பை வௌியிட்டார். அவரது நடிப்பில் அவருடைய 68வது படமான தி கோட் படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியானது இதையடுத்து, அவருடைய கடைசி படமாக தளபதி 69 உருவாகிவருகிறது. ஜனநாயகன் என பெயரிடப்பட்ட இந்த படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கிவருகிறார்.


நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வரும் நிலையில், அப்பகுதியில் கனமழை பெய்துவருகிறது. ஜீப் மூலம் கேரவனுக்கு வந்து, விஜய் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், விஜய்யை காண ரசிகர்கள் அந்த இடத்தில் குவிந்துள்ளனர்.