ஜனநாயகன் திரைப்படம்- தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை

 
ச்

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்த திரைப்பட தணிக்கை மறு ஆய்வு குழுவினர், படத்தில் சில அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் அதனை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர்.

ஜனநாயகன்  திரைப்படத்தைத் தணிக்கை வாரியத்தின் மறுஆய்வு குழுவினர் தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர்.  விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழுவினர் நேற்று படம் பார்த்தனர். அந்தப் படத்தைப் பார்த்த அக்குழுவினர் தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதன் காரணமாக தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர்.

ஜனநாயகன் படத்திற்கு மறு தணிக்கை மும்பையில் நடைபெற்றது. அரசியல் கட்சி தலைவர் நடித்திருக்கும் படம் என்ற அடிப்படையில் மறு தணிக்கை பார்த்த குழுவினர் படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்க்கவும் பரிந்துரைத்துள்ளனர். தேர்தலுக்கு பிறகே படத்தை வெளியிடவுள்ளதால் எதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என படக்குழு கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.