பாஜகவை கூட்டணியிலிருந்து விலக்கி வைக்கும் தெம்பும் தைரியமும் அதிமுகவிற்கு இல்லை- ஜவாஹிருல்லா

 
 ஜவாஹிருல்லா

பா.ஜ.க வை கூட்டணியிலிருந்து விலக்கி வைக்கும் தெம்பும் தைரியமும் அ.தி.மு.க விற்கு  இல்லை என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

பாபநாசம் தொகுதி திமுக வேட்பாளர் ஜவாஹிருல்லா மருத்துவமனையில் அனுமதி |  Jawahirullah admitted in hospital - hindutamil.in

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மனித நேய மக்கள் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா, “ நீண்ட காலம் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். இந்த நிலையில் எங்களின் கோரிக்கையை ஏற்று ஆயுள் சிறைவாசிகள் 49 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு  ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இதுவரை ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். 49 பேரில் ஒருவர் சிறையிலேயே உயிரிழந்து விட்டார் இருந்த போதும் மற்றவர்கள் விடுதலைக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அதனை கண்டித்தும் உடனடியாக அந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் வரும் அக்டோபர் 28ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

புதிய நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதூரி பகுஜன் சமாஜ் எம்.பி தானிஷ் அலியை பார்த்து அவர் இஸ்லாமியர் என்பதால் வெறுப்பு பேச்சை பேசி உள்ளார். அவரின் பேச்சு  பாஜகவினரின் ரத்த நாளங்களில் இஸ்லாமிய வெறுப்பு இருப்பதை காட்டுகிறது. அவரின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் அது  தண்டனை ஆகாது. மாறாக ரமேஷ் பிதூரி எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

BJP should be responsible for suicide of student fear of NEET exam says  Jawahirullah | நீட் தேர்வால் மாணவர் தற்கொலைக்கு பாஜக அரசு தான் காரணம்:  ஜவாஹிருல்லா

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வர கூடாது என்கிற நோக்கில் தான் அந்த மசோதாவை நிறைவேற்றி உள்ளார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரை செய்த பின்பு தான் மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என கூறி உள்ளார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து தொகுதி மறுவரை செய்தால் தென் மாநிலங்களில் தற்போது உள்ள பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அதற்காக தான் பா.ஜ.க அதை செய்ய துடிக்கிறது எனவே மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரை செய்யாமல் நிலப்பரப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரை செய்ய வேண்டும்.

பா.ஜ.க வை தன் தோலிலிருந்து இறக்கும் தைரியமும் தெம்பும் அ.தி.மு.க விற்கு இல்லை. குறைந்தப்பட்சம் 2024 தேர்தல் வரையாவது அவர்கள் கூட்டணியில் தொடர்வார்கள். இந்தியா கூட்டணியின் வீச்சு கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட பலரையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இணைய கமல்ஹாசனும் விருப்பம் தெரிவித்துள்ளார் என்றால் அது இந்தியா கூட்டணியின் பலத்தை காட்டுகிறது” என்றார்.