"திமுக கூட்டணியில் கூடுதல் இடம் கேட்போம், ஆனால் ஆட்சியில் பங்கு வேணாம்”- ஜவாஹிருல்லா

 
“சசிகலாவின் வருகை திமுகவின் வெற்றியை பாதிக்காது” – ஜவாஹிருல்லா “சசிகலாவின் வருகை திமுகவின் வெற்றியை பாதிக்காது” – ஜவாஹிருல்லா

தமிழகஎதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ஆகியோர் தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைபடுத்தி பேசியுள்ளது அரசியல் காழ்புணர்ச்சி மற்றும் பொறமையின் வெளிப்பாடு என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் தேவையற்ற பதற்றத்தை என்ஐஏ உருவாக்குகிறது: எம்எல்ஏ எம்.எச். ஜவாஹிருல்லா

பெரம்பலூரில்  திருமண விழா ஒன்றில் பங்கேற்க வந்திருந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்திற்கு கல்வி நிதி மறுக்கப்படுவதை கண்டித்து, சென்னையில் உண்ணா விரதபோராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்திலுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். விரைவில் அவரது உண்ணாவிரத போராட்டத்தை அவர் முடித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்து வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதற்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சை படுத்தி பேசியுள்ள அன்புமணி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது செயல் அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் அவர்களது பொறாமையின் வெளிப்பாடு.

திமுக தலைமையிலான கூட்டணி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல்கள் மட்டுமின்றி நீண்ட காலமாக திமுக கூட்டணி ஒற்றுமை உணர்வோடு ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது ஆனால்  எதிர் தரப்பில் இருக்கக்கூடிய அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியினர் ஆள்சேர்ப்பதற்காக  பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணியை யாரும் ஏறெடுத்தும் பார்ப்பதாக தெரியவில்லை. புதுப்புது கூட்டணிகள் தான் தமிழ்நாட்டில் உருவாகும் சூழல் நிலவுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அரசு திறம்பட செயல்படுத்தி வருகிறது. திமுக வலுவான கூட்டணி அமைத்து இருக்கிறது. எனவே வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வரக பொறுப்பேற்பார். 

ஐநா சபையின் அலுவல் மொழியான அரபு மொழி தீவிரவாத மொழியா?- ஜவாஹிருல்லா

ஒன்றிய பாஜக அரசுகுடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்த போது நாடாளுமன்றத்தில்  அதற்கு ஆதரவு கரம் கொடுத்த அதிமுக சிறுபான்மை இன மக்களுக்கு அதிக நலத்திட்டங்களை வழங்கியதாக கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள். நடிகர் விஜய் பெரிய அளவில் தமிழக சட்டமன்ற தேர்தலில் சோபிக்க மாட்டார். மாநாட்டுக்கு வந்த கூட்டத்தை வைத்து தேர்தல் அரசியலை நிர்ணயிக்க முடியாது. விஜயின் மாநாட்டு கவர்ச்சி பேச்சை மக்கள் ரசிப்பார்கள். ஆனால் வாக்களிக்க மாட்டார்கள். அந்த வகையில் பார்க்கும் பொழுது நடிகர் விஜய்  தேர்தலில் பெருமளவு வெற்றி பெற முடியாது. நிச்சயமாக திமுக கூட்டணி அதிமுக கூட்டணிக்கு அடுத்த தாக மூன்றாவத இடத்திற்கு தான் அவர் வர முடியும். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மணப்பாறை மற்றும் பாபநாசம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறோம். அந்த அடிப்படையில் வரும் தேர்தலில் திமுக விடம் கூடுதல் இடங்களை கேட்போம். தேர்தலில் வெற்றி என்பதே முதல் இலக்கு ஆட்சியில் பங்கு என்பதை பற்றி பிறகு யோசிப்போம்” என்றார்.