பட்ஜெட்டில் ரயில்வே குறித்து ஒரு வரிகூட இல்லை- ஜவாஹிருல்லா

 
“திமுக கூட்டணியில் சிறப்பான இடங்களை பெறுவோம்”- ஜவாஹிருல்லா நம்பிக்கை

ரயில்வே துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை இருந்ததை ஒழித்த மோடி அரசு இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலையில் ரயில்வே குறித்து ஒரு வரிகூட குறிப்பிடாதது கண்டனத்திற்குரியது என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர்  எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

ஜவாஹிருல்லா | Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர்  எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2024-25 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகளின் தயவோடு நடத்தப்படும் ஆட்சி என்பதனால் பீகாருக்கும் ஆந்திரப்பிரதேசத்துக்கும் மட்டும் சிறப்புத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு உட்பட பெரும்பாலான  மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. 

தமிழ்நாடு அரசின் முக்கிய கோரிக்கைகளான வெள்ள நிவாரண நிதி, இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் சொல்லப்படவில்லை. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகக்கூறியுள்ளார். உண்மை நிலை அப்படியானதாக இல்லை என்பதனை மக்கள் அனைவரும் உணர்ந்திருக்கின்றனர்.  இந்த நிதிநிலை அறிக்கை அனைவரையும் உள்ளடக்கியது என்று பேசியுள்ள நிதி அமைச்சர் சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கான அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீட்டையும் அறிவிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது. அதே போல் பட்டியல் இன மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான முன்னேற்றம் குறித்தும் அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. 

இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் பாஜகதான் இந்துக்களுக்கு எதிரான கட்சி:  மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா சிறப்புப் ...

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் இடைக்கால நிதிநிலை அறிக்கைகளையும் வெட்டி ஒட்டி இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியிருப்பதையும் புறந்தள்ள முடியாது. ரயில்வே துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை இருந்ததை ஒழித்த மோடி அரசு இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலையில் ரயில்வே குறித்து ஒரு வரிகூட குறிப்பிடாதது கண்டனத்திற்குரியது. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முறையாக நடத்தாமல் போதிய புள்ளிவிவரங்கள் இல்லாமல் வெறும் கற்பனை  விவரங்களைச் சொல்லி மக்களை ஏமாற்ற ஒன்றிய அரசு முயல்கிறது. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை காற்று ஊதப்பட்ட பலூன் போன்றது தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.