சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகிறார் ஜெய் ஷா..

 
ICC - Jay Shah ICC - Jay Shah

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக  பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்படுகிறார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) தற்போதைய தலைவராக நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்க்லே இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 30ம்தேதியுடன் முடிவடைகிறது. ஏற்கனவே 2 முறை ஐ.சி.சியின் தலைவர் பதவியை வகித்த அவர், 3 வது முறையாக தாம் தலைவர் பதவியில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தார்.  

ICC

இதனையடுத்து ஐ.சி.சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும்,புதிதாக தேர்ந்தெடுக்கபடுபவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் இருக்கும் எனவும் அறிவித்திருந்தது.  ஐ.சி.சி.-ன் தலைவராக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக  தகவல்கள் வெளியாகி வந்தன. 

அதன்படியே தற்போது  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா , சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகிறார்.  இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகும் மூன்றாவது இந்தியர் என்கிற பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார். இவரது பதவிக்காலம் டிசம்பர் 1ம் தேதி ஆரம்பமாகி 3 ஆண்டுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.