ஜெயலலிதா நினைவு தினம் - சசிகலா அஞ்சலி!!

 
sasikala sasikala

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7ஆம்ஆண்டு நினைவு  நாளான 05-12-2023 அன்று அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்துகிறார்.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தன் இறுதிமூச்சு வரை பாடுபட்டவர். உயிர் தொண்டர்களின் நலனில் அக்கறைக் கொண்டு, தன்னலமின்றி பொதுநலத்தோடு "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டிய ஒப்பற்ற மக்கள்தலைவி, நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் எந்நாளும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

jayalalitha

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் வகுத்துக்கொடுத்த பாதையில் அடிபிறழாமல், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடைபிடித்து வந்த ஒப்பற்ற கொள்கைகளைப் பின்பற்றி அதேவழியில் நாமும் தொடர்ந்து பயணித்திட, அவர்களது நினைவு நாளான 05-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் கழகத் தொண்டர்களோடு சேர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க இருக்கிறார்கள்.

sasikala

இந்த புனித நிகழ்வில், புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவியின் பாசறையில் பயின்ற பாசமிகு தொண்டர்களும், கழகத்தின் அனைத்துப்பிரிவு நிர்வாகிகளும், புரட்சித்தலைவி அம்மா அவர்களை தங்கள் முன் மாதிரியாக மனதில் வைத்து, தன்னம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் சிங்கப்பெண்களும், இளம்சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்களும், ஜாதிமத பேதமின்றி, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக. அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.